Full Title
ஆதி சங்கரனின் மக்கள் விரோத தத்துவம் கே எஸ் பகவான்
Member of
Alternative Title
மக்கள் விரோத தத்துவம்
Place Published
கரூர்
Date Issued
1986-04-01
Description
பதிப்பாளர் உரை
சமுதாய மாற்றத்தில் கருத்துக்களின் பங்கு என்ன 'என்பதை அறிவியல் பூர்வமான சமுதாயப் பார்வைடையவர்கள் நன்கு அறிவர்.
சமுதாயத்தில் சுரண்டப்படுவோர் சுரண்டுவோர் என ஏற்பட்ட பின், இருதரப்பிலும் அவரவர் நன்மைக் கேற்ற கருத்துக்களை அவற்றின் ‘சிந்தனைப் பெட்டகத்தினர்’ படைக்கலாயினர். அவற்றைத் தத்துவங்களாகவும், கல்வி, கலை, இலக்கியம், அய்தீகம், நல்லது கெட் டது, செய் செய்யாதே......ஆகியவை மூலமும் மக்கள் மத்தியில் நிலைநாட்டினர்.
ஆனால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆளும் வகுப்பார்கள், தம் நலனுக்கான கருத்துக்களை மக்கள் பீது திணித்தும், மக்கள் சார்பானவற்றை வன்முறை மூலம் கூட அழித்தொழித்தும் வந்துள்ளனர்.
"ஒரு கருத்து வெகுமக்களைப் பற்றிக்கொண்டு விட்டால், அது ஒரு சக்தியாகப் பரிணமித்து விடுகிறது’ என்ற உண்மையை மேல்தட்டுச் சிந்தனையாளர்கள் தெரிந்தே வைத்திருந்தனர். அவ்விதமே சமூகத்தை ஆக்கியும் விட்டனர். அதன் பலன்தான் இன்று சாமானியர் கூடத் தங்கள் நலனுக்கு விரோதமான தத்துவங்களை, கருத்துக்களை ஏதோ தங்கள் நன்மையின்பாற்பட்டதுபோலக் கருதிக் கொண்டிருப்பதையும், கூறுவதை யும் அன்றாட வாழ்வில் காண்கிறோம்.
ஆனாலும், மக்கள் போர் ஓய்வதில்லை. மமதை கொண்ட, சூழ்ச்சித் திறன் படைத்த மேல்தட்டுக்காரர்கள் என்றென்றும் வெற்றிகொள்ளப் போவதில்லை.