Document
Full Title
தமிழகத்து மும்மணிங்கள் அரசு மணிமேகலை
Member of
Alternative Title
tamilnadu
Place Published
மயிலாப்பூர் சென்னை
Date Issued
1989-12-12
Description
வாழ்ந்த பிறகு வேண்டுமானால் பலர். ஆனால்
ஆவார்கள் வரலாறு வாழும்போதே.
வரலாறாய் ஆனவர்கள் ஒரு சிலரே. அத்தகைய சான்றோரே தந்தை பெரியார், கர்மவீரர் காமராசர், பேரறிஞர் அண்ணா முதலியோர். அவர்களின் வாழ்க்கை வரலாறே எளிய முறையில் இந்நூலில் எடுத்தியம்பப்படுகிறது.
இளஞ் சிறாருக்குப் பயன்படத்தக்க விதத்தில் வாழ்க்கை நிகழ்ச்சிகள் வகை தொகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவர்களின் திருவுருவங்கள் நம் இல்லங்களில் படங்களாக மட்டும் தொங்கினால் போதுமா? பாடங்களாகவும் அவர்கள் கொள்கைகள் நம் மனங்களில் பதிந்திருக்க வேண்டாமா?
,
இளைஞர் உலகம் இத்தகைய தலைவர்களின் தியாகங்களை, போராட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும். அறிந்துகொண்டே ஆகவேண்டும் என்கிற ஆர்வத்தின் விளைவே இந்த முயற்சி!
தடைக் கற்களைப் படிக்கற்களாக்கிக் கொண்ட இந்தத் தலைவர்கள் - வேதனைகளை வென்று சாதனைகளைப் பட்டியலிட்டுக் காட்டிய சரித்திர நாயகர்கள்! இவர்களை-இவர்களின் செயற்கரிய செயல்களை ஒற்றை நூலிலே ஒருவாறு சொல்ல முற்படுதல், கடல் நீர் மொத்தத்தையும் கைக்குள் அடக்கும் முயற்சியே ஆகும்!,
இளந் தளிர்களே! இந்நூலைப் படியுங்கள்! இதய வீதிகள் விசாலம் பெறும்; இருண்ட விழிகள் வெளிச்சம் பெறும்.
அரசு மணிமேகலை.
18:00 12 04 24
Document